முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யுமாறு கடுவலை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமையவே இவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2021 நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நீதிமன்ற பெயர்ப்பலகையை போன்ற ஒன்றை தயாரித்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இவர் நடந்துகொண்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி நீதிமன்ற பிடியாணை உத்தரவுக்கமைய இன்றைய தினம் பொரளை பகுதியில் துமிந்த நாகமுவவை கைது செய்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.