சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் பொருளாதார பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கக் கூடிய இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் கலந்துரையாடுவதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாட்டுடனும் கலந்துரையாடுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்படவுள்ளது.
அந்த அமைச்சர்கள் யார் என்பதனை தீர்மானிக்கும் பொறுப்பை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.