File Photo
‘டிக் டொக்’ ஊடாக வெளியான வீடியோ ஒன்று தொடர்பாக ஏற்பட்ட முறுகல் காரணமாக கொழும்பு, கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
3 ஆம் திகதி மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் வீதியில் சென்றுகொண்டிருந்த போது, மற்றுமொரு குழுவினர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில், தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
டிக் டொக் செயலியில் வெளியான வீடியோ ஒன்றை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.