May 25, 2025 8:55:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்!

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கமைய சுசில் பிரேம ஜயந்த குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேம ஜயந்த பதவி வகித்தார்.

இந்நிலையில் கடந்த நாட்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் சுசில் பிரேம ஜயந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.