May 25, 2025 23:12:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்

இலங்கையில் ஜனவரி 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இ.போ.ச மற்றும் தனியார் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய பஸ் கட்டணங்கள் 17.44 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதுடன், ஆரம்பக் கட்டணம் 14 ரூபாவில் இருந்து 17 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை ததற்போது அறவிடப்படும் 17 ரூபா கட்டணம் 20 ரூபா வரையிலும், 23 ரூபா கட்டணம் 27 ரூபா வரையிலும், 28 ரூபா கட்டணம் 33 ரூபா வரையிலும், 33 ரூபா கட்டணம் 39 ரூபா வரையிலும் அதிகரிக்கவுள்ளது.

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான பட்டியல்