January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

9 நாட்களில் பெருமளவான வாகன விபத்துக்கள்: 86 பேர் பலி!

File Photo

இலங்கையில் கடந்த 9 நாட்களில் பதிவான பல்வேறு வாகன விபத்துக்களில் 86 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் வாகன விபத்துகளில் 33 பேர் உயிரிழந்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜனவரி முதலாம் திகதி 18 பேரும், 2 ஆம் திகதி 15 பேரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று டிசம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரையிலான ஒரு வாரத்திற்குள் 52 விபத்துகளில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் என புள்ளிவிபரத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் 2,365 பாரதூரமான வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 2,461 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று கடந்த வருடத்தில் வீதி விபத்துகளில் 5,383 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.