November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தெஹிவளை கடலில் முதலை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்!

கொழும்பு, தெஹிவளை கடல் பகுதியில் முதலை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு பின்னால் உள்ள கடல் பகுதியில் நண்பர்களுடன் கடலில் குளித்துக்கொண்டிரந்து அந்தப் பிரதேசத்தை சேர்ந்த 50 வயது நீச்சல் வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது, குறித்த நபரை முதலை இழுத்துச் செல்வதை கண்ட மீனவர்கள் அவரை முதலையிடம் இருந்து மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தப் பகுதியில் உள்ள நீரோடை ஊடாக முதலை கடலுக்குள் வந்திருக்கலாம் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அது உவர் நீர் முதலை இனத்தை சேர்ந்தது என்றும் அது கடலுக்குள் இருப்பதால் அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு ஆபத்து என்றும், இதனால் அதனை அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.