June 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விரைவில் அமைச்சரவை மாற்றம்!

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் வாரங்களில் இந்த மாற்றம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக 6 முக்கிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட அரச உயர்மட்டத்தில் கலந்துரையாடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாராளுமன்ற கூட்டத் தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.