அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.
தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு டிசம்பர் 15 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்த பஸில் ராஜபக்ஷ, இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
இதேவேளை மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக இம்மாதம் 10 ஆம் திகதி அவர், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையில் இந்தியாவில் தங்கியிருக்கும் பஸில் ராஜபக்ஷ, இந்தக் காலப்பகுதியில் பிரதமரை சந்திப்பார் என்றும், இதன்போது இலங்கை எதிர்நோக்கும் டொலர் நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் பஸில் ராஜபக்ஷ, இந்தியாவுக்கு சென்றிருந்த போதும், அதன்போது பிரதமரை சந்திப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் இம்முறை அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.