சீமெந்தின் விலையை அதிகரிப்பதற்கு இலங்கை சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
ஜனவரி முதலாம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
கடந்த மாதங்களாக சந்தைகளில் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.