November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெங்காயம், உருளைக்கிழங்கு மீதான வரிகள் குறைப்பு!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான வரி கிலோ ஒன்றுக்கு 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.