April 15, 2025 16:02:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இந்தியா எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாக இருக்கும்”

இந்தியா எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாக இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் டுவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

”நெருங்கிய நண்பராகவும் அயலவராகவும் இந்தியா எப்போதும் இலங்கையுடன் இருக்கும்” என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத முற்பகுதியில் புது டெல்லியில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைய, இலங்கைக்கு நீண்டகால மற்றும் மத்திய கால ஒத்துழைப்புகளை இந்தியா வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது உணவு, சுகாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் செலாவணி ஸ்திரத்தன்மை ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அந்த டுவிட்டர் பதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.