
இலங்கையில் அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்கள் அனைவரும் தமது அலுவலகங்களில் பணிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என்று அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை அழைப்பதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனால் அரச ஊழியர்கள் பலருக்கு வீடுகளில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வீடுகளில் இருந்து பணியாற்றும் நடைமுறையை இல்லாது செய்து அனைத்து ஊழியர்களையும் அலுவலகங்களுக்கு அழைப்பதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.