May 29, 2025 5:52:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டொலர் நெருக்கடி: மீண்டும் மூடப்படும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடுவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி ஜனவரி 3 ஆம் திகதி முதல் அந்த நிலையம் மூடப்படும் என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி நிலைமையை காரணமாகவே இதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 30 ஆம் திகதியளவில் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க எதிர்பார்ப்பதாகவும், இது மூடப்படுவதால் எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நவம்பர் 15 ஆம் திகதி முதல் மூடப்பட்ட எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் டிசம்பர் 7 ஆம் திகதி திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.