June 12, 2025 17:58:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நள்ளிரவு முதல் பால்மா விலை அதிகரிப்பு!

இலங்கையில் டிசம்பர் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மா விலைகளை அதிகரிப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மா பக்கட்டின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பக்கட்டின் விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என்று அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.

புதிய விலை அதிகரிப்புக்கமைய சந்தைகளில் ஒரு கிலோ பால்மா பக்கட்டின் விலை 1345 ரூபாவுக்கும், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 540 ரூபாவுக்கும் விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் பால்மா விலை கிலோ ஒன்றுக்கு 225 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மீண்டும் அதனை அதிகரிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.