அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த 9 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்க்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவுக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் ஆசனங்களை ஒதுக்குமாறும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்க்ஷ்மன் கிரியெல்ல வேண்டுகோள் விடுத்துள்ளார்.
20ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றக் குழு தீர்மானித்திருந்தது.
அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, ஏ.அரவிந்த குமார், இஷாக் ரஹ்மான், பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், நசீர் அஹமட், ஏ.ஏ.எஸ்.எம்.றஹீம் மற்றும் எஸ்.எம்.எம்.முஷார்ரப் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.