May 28, 2025 12:32:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் அதிகரிக்கும் பால்மா விலைகள்!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை மீண்டும் அதிகரிப்பதற்கு பால்மா நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

நாளைய தினத்தில் விலை அதிகரிப்பு தொடர்பான விபரங்களை வெளியிடவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பால்மா விலைகள் ஏற்கனவே கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி கிலோ ஒன்றுக்கு 225 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மீண்டும் அதனை அதிகரிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி நிலைமையை தொடர்ந்தே தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாட்டில் சந்தைகளில் பால்மாவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.