November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் டொலர் கையிருப்பு அதிகரித்தது!

இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

”முன்னர் அறிவித்ததை போன்று இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளது. இதனை 2021 ஆம் ஆண்டின் இறுதி வரை தக்கவைத்துக் கொள்ளமுடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் டொலர் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

இதிலிருந்து மீள்வதற்காக மத்திய வங்கியினால் 6 மாத காலத்திற்கான விசேட பொருளாதார அவிருத்தித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.