
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
‘ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட்’ (TRINCO Petroleum Terminals LTD) என்ற பெயரில் குறித்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்தாக செயற்படவுள்ள இந்த நிறுவனம், ‘இந்திய ஒயில் கம்பனி’ நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள எண்ணெய் குதங்களிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் பங்கினை நிர்வகிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட்’ நிறுவனத்தின் கீழ் செயற்படும் எண்ணெய் குதங்கள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்த முடியுமாக இருக்கும் என்றும், இது தொடர்பில் அடுத்த மாதத்திற்குள் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படுமென்று கம்மன்பில கூறியுள்ளார்.