இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கிளர்ந்தெழக் கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி நிலைமையை மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சர்வதேச நாணய நிதியத்திற்கு உடனடியாக சென்று உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்று வழியை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய நிலைமை தொடர்ந்தால் அடுத்த வருடம் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை நாடு எதிர்நோக்க நேரிடும் என்பதுடன் மக்கள் கிளர்ச்சி வெடிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறான கிளர்ச்சி அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் நிலைமையை தடுக்க முறையாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.