இலங்கையினால் பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து பெற்றுள்ள கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
கடனை திருப்பிச் செலுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து மேலும் கால அவகாசத்தை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கமைய கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களால் நீடிப்பதற்கு பங்களாதேஷ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் மூன்று தவணைகளின் அடிப்படையில் 200 மில்லியன் டொலர்களை பங்களாதேஷ் வங்கியிடமிருந்து இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, பங்களாதேஷூக்கு கடன் தொகைக்கு வட்டியாக 2 சதவீதத்தை செலுத்தவேண்டும். அவ்வாறு ஆறு மாதங்களுக்குப் பின்னரும் தவணையை செலுத்தாது இருந்தால் வட்டி வீதம் 2.5 ஆக அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.