
ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பி.பீ.ஜயசுந்தரவின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தில் அமைச்சர்கள் பலரும் அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன், அவரை பதவி விலக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பி.பீ.ஜயசுந்தர பதவி விலகத் தீர்மானித்திருந்ததுடன், தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்ததாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் அந்தக் கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுத்துவிட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும், தற்போது ஜனாதிபதி குறித்த கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.