April 23, 2025 17:58:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீர்கொழும்பு வயலில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: மூவர் காயம்!

நீர்கொழும்பு, கிம்புல்பிட்டிய பிரதேசத்தில் சிறிய ரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

வயலொன்றில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் காயமடைந்த இரண்டு வெளிநாட்டவர்கள் அடங்கலாக மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவில் விமான நிறுவனமொன்றுக்கு சொந்தமான குறித்த விமானம் சீகிரியாவில் இருந்து கொக்கல நோக்கி பறந்துகொண்டிருந்த போது அதில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதனை தரையிறக்குவதற்கு முயன்ற போதும், அது முடியாது போனதையடுத்து விமானி குறித்த வயல்பகுதியில் தரையிறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தை தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்த விமானப் படையினர், விமானத்தில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.