January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்: இளைஞன் மரணம்!

கிளிநொச்சி, கௌதாரிமுனை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனைக்கோட்டையிலிருந்தும் மற்றும் குருநகரில் இருந்தும் குறித்தப் பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த இளைஞர்கள் குழுக்களுக்கிடைலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.