January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரசாங்கம் அனைத்தையும் குழப்பிக்கொண்டுள்ளது”: முன்னாள் ஜனாதிபதி!

பொருளாதாரம், அரசியல் மற்றும் சர்வதேசம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் இலங்கை அரசாங்கம் குழப்பிக்கொண்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அனைத்து விதமான பிரச்சனைகளையும் அரசாங்கம் குழப்பிக்கொண்டுள்ளதால், நாட்டு மக்களின் வாழ்க்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுகின்ற போதும், அரசாங்கம் அங்கு செல்ல மாட்டோம் என்று கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அங்கு சென்றால் ஏதேனும் நிவாரணம் கிடைக்கும் என்றும், தனது ஆட்சிக் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பங்காற்றினேன் என்றும் அதன்போது விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளுக்கு தான் இணங்க முடியாது என்று கூறியதை தொடர்ந்து அந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.