
6 மாத கடன் உதவி அடிப்படையில் சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்ய இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஜனவரி 23 ஆம் திகதியளவில் முதலாவது எண்ணெய்க் கப்பல் இலங்கை வரவுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கும், கப்பல் நாட்டை வந்தடைந்த பின்னர் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளை கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளின் கடன் உதவி அடிப்படையில் அவற்றை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.