April 26, 2025 16:25:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சந்தையில் எரிவாயுவுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு!

சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதில் தொடர்ந்தும் தாமதம் நிலவுகின்றது.

எரிவாயு தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் சிலவற்றை மேற்கொள்வதனால் அதனை விநியோகிக்கும் நடவடிக்கையில் சிறிது தாமதம் ஏற்படக்கூடுமென்று ´லிட்ரோ´ நிறுவனம் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து எரிவாயு தரம் தொடர்பில் இலங்கை தரக் கட்டளை நிறுவனத்தினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு மேலதிகமாக புதிதாக இன்னும் சில பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் தொடர்ந்தும் சந்தையில் எரிவாயுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.