January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். கடலில் 155 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா பொதிகள் மீட்பு!

இலங்கையின் வடக்குக் கடற்பகுதியில் 155 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

23 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பகுதியில் நடத்திய விசேட தேடுத்தல் நடவடிக்கையின் போது, 517 கிலோவுக்கும் அதிக நிறையுடைய கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரை கண்டதும் கஞ்சா பொதிகளை கரைக்கு கொண்டு வர முடியாது சந்தேக நபர்கள் அவற்றை கடலில் போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து அந்தப் பொதிகளை மீட்டுள்ள கடற்படையினர், சந்தேக நபர்கள் இருவரையும் அவர்களின் படகுகளுடன் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் கைதான சந்தேக நபர்கள் 26 மற்றும் 31 வயதுடைய யாழ். கொடிகாமம் மற்றும் மிருசுவில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடலில் மீதந்த நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை கரையில் தீயிட்டு அழிக்க கடற்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.