April 15, 2025 18:59:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புத்தாண்டில் அரச ஊழியர்களுக்கு 4000 ரூபா முற்பணம்!

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு புதுவருடத்திற்காக விசேட முற்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

4000 ரூபா வரையில் முற்பணத்தை வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முற்பணம் வழங்கும் நடவடிக்கை 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.