January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: நால்வர் பலி!

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீரென பொலிஸ் நிலையத்திற்குள் அவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

பின்னர் குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டை நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுமுறை பெற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட பிரச்சனையை தொடர்ந்தே அவர், துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.