இலங்கையில் அடுத்த வருடத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கள ஆய்வுகளின் ஊடாக, தனக்கு இதனை உறுதியாக கூற முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் அமைச்சரவை கூட்டங்களில் கூறியுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளும் இந்த உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாகவும், இந்த நிலைமையைத் தடுக்க விவசாய உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளரான பேராசிரியர் உதித்கே ஜயசிங்கவும் இது தொடர்பில் கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமையின்படி நிச்சயமாக உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்று பேராசிரியர் உதித் கே ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.