
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திருப்பதியில் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியாவுக்கு சென்ற மகிந்த ராஜபக்ஷ, இன்று காலை திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
பிரதமருடன் அவரின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவும் அங்கு சென்றிருந்தார்.
இதனையொட்டி திருப்பதியில் அவர்கள் தங்கியிருந்த விடுதி, கோவில் வளாகம், அவர் செல்லும் பகுதிகள், மலைப்பாதை போன்ற பகுதிகளில் இந்திய அதிகாரிகளினால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் இன்று மாலை நாடு திரும்பவுள்ளார்.