பாகிஸ்தானின் சியால்கோட்டில் வன்முறைக் கும்பலொன்றின் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரியந்த குமார பணியாற்றிய நிறுவனத்தில் அவர் வகித்த பதவிக்கு மற்றுமொரு இலங்கையரை நியமிக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் மத ஒத்துழைப்புக்கான விசேட தூதுவர் ஹாபிஸ் தாஹிர் மெஹ்மூத் அஃப்ராபி மற்றும் அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் விஜேவிக்கிரம ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சியல்கோட் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய பிரியந்த குமார, வன்முறைக் கும்பலொன்றினால் தாக்கப்பட்டும், உயிருடன் எரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டிதிருத்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.