July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ‘ஒமிக்ரோன்’: பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

இலங்கையில் ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தீவிரமாக பரவும் அபாயம் காணப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் எதிர்வரும் மூன்று வாரங்களின் பின்னர் நாட்டில் பிரதானமாக பரவும் வைரஸாக ‘ஒமிக்ரோன்’ இருக்கலாம் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலைமைக்கு நாடு தள்ளப்படுவதை தடுக்க வேண்டுமாயின் அரசாங்கம் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது வரையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களாக 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள போதும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஒமிக்ரோன் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதும், இலங்கையில் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு அவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்காது அரசாங்கம் இருப்பதாக உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நிலைமையை புரிந்துகொண்டு சுகாதார ஒழுங்குவிதிகளை பேணி மக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று தாம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.