
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்குமாறு வலியுறுத்தி ஜேவிபியினரால் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்று முதல் நாடு முழுவதும் பிரதான நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இன்றைய தினம் மஹரகம, கிரிபத்கொட, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மஹரகமவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, ”உடனடியாக மக்களுக்கு நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை கொண்டு செல்லக் கூடியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிச் செல்லுமாறு அரசாங்கத்தை கோருகின்றோம்” என்று கூறியுள்ளார்.