April 30, 2025 18:56:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு மகிழ்ச்சியே”

தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமாக இருந்தால் நிச்சயமாக அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டம் தொடர்பில், கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, ஜீவன் தொண்டமான் இவ்வாறு கூறியுள்ளார்.

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு அரசியலும் காரணமாக இருக்கலாம். சம்பந்தன் ஐயா மூத்த அரசியல்வாதி. அவரை நாம் மதிக்கினறோம்” என அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், “எமக்கு அழைப்பு விடுக்கப்படும்பட்சத்தில் அந்த வேலைத்திட்டத்தில் பொதுநலன் இருப்பின் பங்கேற்போம். எவ்வாறாயினும் எமக்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும் எல்லோரும் ஓரணியில் இணைந்துள்ளமை மகிழ்ச்சியே” என்றும் குறிப்பிட்டுள்ளார்.