
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த வாரம் முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என போக்குவரத்து அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுக்கும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையே, நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கட்டண திருத்தம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய அடுத்த வாரத்தில் கட்டண அதிகரிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.