April 17, 2025 5:58:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ‘ஒமிக்ரோன்’ தொற்றுடன் மேலும் மூவர் அடையாளம்!

இலங்கையில் ‘ஒமிக்ரோன்’ தொற்றுடன் மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் சூடானில் இருந்தும் ஒருவர் தன்சானியாவில் இருந்தும் வந்தவர்கள் என்று  வைரஸ் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் ஜுட் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 16 மற்றும் 20 ஆம் திகதிகளில் இவர்கள் இலங்கை வந்திருந்த நிலையில் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒமிக்ரோன் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதன்படி இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே நான்கு பேருக்கு இலங்கையில் இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.