April 23, 2025 9:26:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவசரமாக பயாகல கடற்கரையில் தரையிறக்கப்பட்ட விமானம்!

களுத்துறை மாவட்டத்தின் பயாகல கடற்கரைப் பகுதியில் சிறிய ரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான நிறுவனமொன்றுக்கு சொந்தமான விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

விமானம் வானில் பறந்துகொண்டிருந்த போது, அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கடற்கரைப் பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அந்த விமானத்தில் இருவர் இருந்துள்ளதாகவும், அவர்களுக்கோ விமானத்திற்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கட்டுக்குறுந்த விமானப் படை முகாம் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.