November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எல்லை தாண்டும் இந்திய மீனவர் படகுகள் அரசுடமையாக்கப்படும்”: அமைச்சர் டக்ளஸ்

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மயிலிட்டித் துறைமுக்திற்கான சென்ற அமைச்சர், அங்கு தடுத்து வைக்கப்படடுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை பார்வையிட்ட பின்னர் பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைமுக நிர்வாகத்தினருடனாக கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் இலங்கையின் கடல் வளத்தையும் பாதிக்கும் வகையில் எல்லை தாண்டி வந்து சட்ட விரோதத் தொழில் முறைகளில் ஈடுபடுகின்ற இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கடற்படையினருக்கு வடக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசுடமையாக்கப்படுகின்ற படகுகளை பிரதேச கடற்றொழில் சங்கங்களிடம் கையளித்து, ஆழ்கடல் மீன்பிடி போன்ற சட்ட ரீதியான தொழில்களில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்படும் எனவும், அவ்வாறு பயன்படுத்த முடியாத படகுகளை விற்பனை செய்து இந்தியக் கடற்றொழில் படகுகளினால் பாதிக்கப்பட்டவர்களுகு நஸ்டஈட்டினை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.