April 30, 2025 18:56:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

13 ஆவது திருத்தம்: இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க கொழும்பில் கூடிய தமிழ்க் கட்சிகள்!

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் கோருவதற்கான ஆவணத்தை தயாரிப்பதற்கான கலந்துரையாடலில் தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

கொழும்பு, வெள்ளவத்தை குளோபல் ஹோட்டலில் இன்று இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது இந்தியத் தூதரகத்தில் கையளிப்பதற்கான பொதுவான ஆவணத்தை தயாரிப்பது தொடர்பாக இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

This slideshow requires JavaScript.