கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட ‘ஜெனீவா தோல்வியின் எதிரொலி’ நூல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதியை சந்தித்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அந்த நூலை அவரிடம் கையளித்துள்ளார்.
ஜெனீவா நகரைத் தளமாகக் கொண்டு இலங்கையின் இறையாண்மையில் செல்வாக்கு செலுத்துவதற்கு பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளை ஆய்வுக்குட்படுத்தியும் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் செயற்பாட்டில் கிடைத்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டும், ஆனந்த தேரரினால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் அமைச்சரான குணபால திஸ்ஸகுட்டியாரச்சியினால் எழுதப்பட்ட “அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள்” நூலும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.