
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான நிர்ணய விலைகளை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வரும் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான கேள்வியின் அடிப்படையில் விலைகள் தீர்மானிக்கப்படும் என்று பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்மானத்திற்கு அமைய ஒவ்வொரு பிரதேசங்களிலும் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.