யாழ்ப்பாணம், பருத்தித்துறை – புலோலி பிரதேசத்தில் பட்டம் விட்ட இளைஞன் ஒருவர் அந்தப் பட்டத்துடன் சேர்ந்து வானில் பறந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நண்பர்களுடன் சேர்ந்து பெரிய பட்டத்தை செய்து அதனை பறக்க விடும் போது, அதன் நூலில் சிக்கிய அவர், கிட்டத்தட்ட 40 அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் பறந்ததாக கூறப்படுகின்றது.
பெரிய பட்டம் என்பதனால் கனமான நூல் அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், பட்டத்தை பறக்கவிடும் போது வீசிய சூழல் காற்றினால் அந்த நபரும் சேர்ந்து பறந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது அவர் வானில் அந்தரத்தில் இருந்த நிலையில், பின்னர் 15 அடி வரையான உயரத்தில் இருந்து கீழே குதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கீழே குதிக்கும் போது காயமடைந்துள்ளதாகவும், ஆனால் பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மந்திகையில்… திக் திக் நிமிடங்கள்…Jaffna youth swept into the air with a kite https://t.co/vfcUz4nvU6
— Tamil Avani NEWS (@TamilAvaniNews) December 21, 2021