July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடகி யொஹானிக்கு அரசாங்கம் வழங்கும் பெறுமதியான பரிசு

சர்வதேச ரீதியில் பிரபலமான இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு காணியொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

யொஹானி டி சில்வாவை கௌரவிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பத்தரமுல்ல ரொபர்ட் குணவர்த்தன வீதியில் அமைந்துள்ள, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கட் குழுவுக்கு 99 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள காணித்துண்டுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள 9.68 பேர்ச்சர்ஸ் காணித்துண்டொன்றை யொஹானி டி சில்வாவுக்கு வழங்குவதற்கு பிரதமர் அமைச்சரவையில் யோசனையை முனவைத்துள்ளார்.

இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதை தொடர்ந்து விரைவில் அந்தக் காணி அவருக்கு வழங்கப்படவுள்ளது.