இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வகட்சி மாநாட்டை நடத்துவதற்கு அரசாங்கத்திற்குள் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி வெகுவிரைவில் ஜனாதிபதியினால் இதற்கான அழைப்பு விடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி அதற்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சர்வகட்சி கூட்டம் நடைபெறுமாக இருந்தால் அதனை தாம் வரவேற்று தாம் அதில் கலந்துகொள்வோம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.