இலங்கையில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகிய நிலையில் அது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று கடந்த நவம்பர் 30 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
8 பேரை கொண்டதாக இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டிருந்ததுடன், அந்தக் குழுவினர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகிய இடங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி இறுதி அறிக்கையை தயாரித்து அதனை இன்றைய தினத்தில் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 847 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.