May 29, 2025 15:50:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை முழுவதும் அரச மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

இலங்கை முழுவதும் அரச வைத்தியர்கள் நாளைய தினத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அவசர சிகிச்சைப் பிரிவுகள், புற்றுநோய் மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் தவிர்ந்த மற்றைய வைத்தியசாலைகளில் போராட்டம் நடைபெறும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு இன்று காலை முதல் 5 மாவட்டங்களில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.