இலங்கையில் ஜனவரி முதலாம் திகதி முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான சட்டத்தை சுகாதார அமைச்சு தயாரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி பொது இடங்களுக்கு செல்வோர் பூரண தடுப்பூசியை பெற்றிருப்பது கட்டாயமாகும் என்பதுடன், அவர்கள் அதனை உறுதிப்படுத்துவதற்கான அட்டையை தம்வசம் வைத்திருப்பதும் அவசிமாகும்.
தற்போது நாடு முழுவதும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.