அடுத்த மாதத்தில் இலங்கைக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான 42 கோடி டொலர் (8610 கோடி ரூபாய்கள்) நிதி அமைச்சர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில முன்வைத்துள்ளார்.
தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான நிதி பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இல்லை என்ற காரணத்தை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் அதற்கான நிதியை நிதி அமைச்சர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுசக்தி அமைச்சர் மீண்டும் முன்வைத்துள்ளார்.
கடந்த அமைச்சரவை கூட்டத்திலும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்த கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில் நிதி அமைச்சரினால் இன்று வரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நெருக்கடி நிலைமையில் அடுத்த ஆண்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் கம்மன்பில, உடனடியாக இதற்கான தீர்மானங்களை எடுத்தாக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.